அகிலம் போற்றும் பெண்மைக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்!

pinterest

மார்ச் 8ஆம் தேதி ஆனது மகளிர் தினமாக உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகின்றது.பெண்களை பெருமைப்படுத்தும் இந்நாளில் தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்த பெண்களின் பட்டியலை காணலாம்.

pinterest

வேலு நாச்சியார்:  இந்தியாவின் முதல் பெண் விடுதலை போராட்ட வீரர் இவர் ஆவார்.ஆங்கிலேயர்களுக்கு எதிராக தைரியமாக போராடிய இவர்  தமிழகத்தில் சிவகங்கை பகுதியை சேர்ந்தவர் ஆவார்

samayam

முத்துலட்சுமி  தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் என்ற பல பெருமைகளை பெற்றவர்.பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்.

samayam

ஜெயலலிதா  தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதா தனது ஆளுமை திறனால்  இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர்.தமிழகத்தில் ஆறு முறை முதல்வர் பதவி வகித்த ஒரே தலைவர் இவர்தான்.

samayam

ஸ்ரீதேவி முதலில் தமிழ் படங்களில் தனது பயணத்தை தொடங்கி பின்பு பல மொழிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்தினார். இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்ற இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

samayam

நன்னம்மாள்  98 வயதான கோவையை சேர்ந்த இவர் தள்ளாத வயதிலும் உடலினை வளைத்து யோகாசனம் செய்யக்கூடியவர்.இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதினை அளித்து பெருமை படுத்தி உள்ளது.

samayam

ரூபா தேவி:  கால்பந்து விளையாட்டில் சாதனை படைத்த தமிழக பெண்மணி. ஆரம்பத்தில் கால்பந்து வீராங்கனையாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரூபா தேவி, பின்னர் நடுவராக மாறினார். இவர் 2016 ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து சங்கமான FIFAவால் சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியமர்த்தப்பட்டார்..

samayam

விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்: நாட்டுப்புற கலைக்கு ஆற்றிய தொண்டின் மூலமாக அனைவரின் கவனத்தையும் பெற்ற பெண் ஆவார். நாட்டுப்புற கலைகள் மற்றும் கலாச்சாரத் துறையில் பேராசிரியராக பணியாற்றிய இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதளித்து கௌரவப்படுத்தியுள்ளது.

samayam