உணவுப்பொருட்களில் இப்படியெல்லாம் கலப்படம் செய்ய முடியுமா?

unsplash

கலப்படம் செய்யப்பட்ட உணவு எது என்று கண்டறிந்த காலம் போய் இன்று கலப்படம் செய்யப்படாத  உணவு எது என்று கண்டறியும் காலம் வந்துவிட்டது.

unsplash

நாம் வீட்டில் உபயோகிக்கும் இந்த பொருட்களில் எல்லாம் கலப்படம் செய்கின்றார்களா என்று நமக்கே ஆச்சர்யமாக இருக்கும்.அவற்றை நாம் இப்பொழுது காணலாம்..

unsplash

நாம் வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் நெய்யில் வனஸ்பதி,ஆயில், ஸ்டார்ச் போன்றவை கலப்படம் செய்யப்படுகின்றன.சில நேரம் மணல் மணலாக இருப்பதற்கு ரவை கூட கலப்படம் செய்யப்படுகின்றன.

unsplash

பட்டாணியில் கலப்படம் செய்யப்படுகின்றது என்றால் உங்களால் நம்ப முடியுமா? பட்டாணியை அரை மணி நேரம் ஊறவைத்து அழுத்தி தேய்க்கும் பொழுது பச்சை நிறத்திற்கு மாற தொடங்கினால் அதில் செயற்கை நிற கலவை சேர்க்கப்பட்டிருகின்றது.

unsplash

நாம் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கும் மஞ்சள்தூளிலும் கலப்படமானது குடிகொண்டுள்ளது. மஞ்சள் தூளில் நிறத்தினை கூட்ட மெட்டானில், குரோமேட் போன்ற மஞ்சள் நிற கலர் பவுடர்கள் சேர்க்கப்படுகின்றன.

unsplash

கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் உபயோகிக்கும் குங்குமப்பூவில் கலப்படம் உள்ளதென்றால் நம்ப முடியுமா?மக்காச்சோள கதிரை சர்க்கரை பாகில் ஊறவைத்து நிலக்கரி தாருடன் சேர்த்து நிறம் மாற்றி செயற்கை குங்குமப்பூ தயாரிக்கப்படுகிறது.

unsplash

மிளகாய் தூளில் நிறத்தினை கூட்ட கலர் பவுடர் மற்றும் செங்கல் தூள் சேர்க்கப்படுகின்றது.

unsplash

நாம் கடைகளில் வாங்கும் தேனில் குளுக்கோஸ், சர்க்கரை பாகு, பிரக்டோஸ் கார்ன் சிரப் போன்றவை கலப்படம் செய்யப்படுகின்றன.

unsplash

கலப்படம் உள்ள பொருட்களை தற்போது பார்த்தோமல்லவா இனி கலப்படத்தை  எளிய சோதனைகள் மூலம்  வீட்டிலேயே எப்படி கண்டறியலாம் என பார்க்கலாம்.

unsplash