கருவளையத்தினை இயற்கையாக சரி செய்வது எப்படி?

pinterest

முகத்திற்கு வசீகர அழகை தருவதென்றால் அது கண்கள் தான்.ஆனால்  சில பெண்களுக்கு கண்ணைச் சுற்றிலும் திடீரென்று தோன்றும் கருவளையத்தின் காரணமாக அந்த கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்து விடுவது உண்டு.

pinterest

கருவளையத்தை போக்க அன்றாட உணவில் கொஞ்சம் அக்கறை காட்டுவதுடன் இந்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றினால் ஒரே வாரத்தில் கருவளையத்தை விரட்டி அடிக்கலாம்.

pinterest

உருளைக்கிழங்கை நன்கு மை போன்று அரைத்து கண்களை சுற்றி பூசி வர கருவளையம் படிப்படியாக மறையும்.

pinterest

கேரட் அல்லது வெள்ளரிக்காய் பிஞ்சினை வட்டமாக  நறுக்கி கண்களின் மேல் வைத்தால் நல்ல பலனளிக்கும்.

pinterest

தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறை ஒன்றாக கலந்து கருவளையத்தின் மீது பூசி 10-15 நிமிடங்கள் கழித்து நீரினால் கழுவி வர  கருவளையம் நீங்கும்.

pinterest

இரவில் கண்களை சுற்றி பாதாம் எண்ணெய் பூசிக்கொண்டு மறுநாள் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரினால் கண்களை கழுவி வந்தால் கருவளையத்திலிருந்து விடுதலை பெறலாம்.

pinterest

இரும்புச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

pinterest

நல்ல தூக்கமும், கண்களுக்கு தேவையான அளவு ஓய்வும் கொடுப்பதும் மிக அவசியம்.

pinterest

இந்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றினால் கருவளையத்தினை விரைவில் விரட்டி விடலாம்.

pinterest