கோடை காலத்தில் தவிர்க்க வேண்டியவை

pinterest

பொதுவாக ஏப்ரல், மே மாதங்கள் தான் கோடைகாலம் என அழைக்கப்படுகின்றது.ஆனால் தமிழகம் முழுவதும் தற்போது இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது..

pinterest

கோடைகாலத்தில் ஏற்படும் நோய்கள் குறித்தும், நோய் பாதிப்பு ஏற்படாமல் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் பார்க்கலாம்.

pinterest

கோடைகாலத்தில் அம்மை நோய், மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு மற்றும் தோல் பிரச்சினைகளே அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை தடுக்க வேண்டும் என்றால் சுத்தமான தண்ணீர், இளநீரை அதிக அளவில் குடிக்க வேண்டும்.

pinterest

நீர்ச்சத்துள்ள பழங்களான தர்பூசணி,வெள்ளரிக்காய் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும்.

pinterest

கோடைகாலமாக இருந்தாலும் தண்ணீரை கொதிக்கவைத்து பின் ஆறவைத்து குடிப்பதே உடலுக்கு நல்லது.

pinterest

கோடைகாலத்தில் கருப்புநிற ஆடைகள் அணிந்து வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

pinterest

உடலில் வெப்பம் அதிகரிக்காமல் இருக்க தினசரி 2 முறை குளிப்பது நல்லது.

pinterest

ஆடு, கோழி, மீன் இறைச்சிகளை கோடைகாலத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

pinterest

சாலையோர கடைகளில் விற்கப்படும் ‘பாஸ்ட் புட்’ உணவு வகைகளையும் சாப்பிடக்கூடாது. இவற்றால் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.

pinterest

இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பழங்கள், கஞ்சி உள்ளிட்ட எளிதில் செரிமானம் ஆக கூடிய சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது சிறந்தது.

pinterest