மகா சிவராத்திரி அன்று செய்யக்கூடாதவை?

pinterest

வருடம் தோறும் மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தியினை நாம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகின்றோம்.

pinterest

இந்த புண்ணிய காலத்தில் சிவனின் திருநாமம் சொல்லி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம்.

pinterest

மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும். இதனால், இந்த ஜென்மம் மட்டுமல்லாது மறுஜென்மத்திலும் நிறைவான வாழ்வையும் பெற முடியும்.

pinterest

நான்கு கால சிவபூஜை  செய்யவேண்டும் இல்லையெனில் அன்று இரவு முழுவதும் கண் விழித்து  ‘சிவபுராண’ உபன்யாசம் கேட்கலாம்.ஆனால் எவையெல்லாம் செய்யக்கூடாது என பார்க்கலாம்.

pinterest

சிவராத்திரியன்று பகலில் தூங்கக் கூடாது.

pinterest

சிவராத்திரி அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, தாயக்கட்டம் ஆடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு.

pinterest

உடலாலும் மனதாலும் சிவ சிந்தனையிடன் இருக்க வேண்டுமே தவிர, தொலைக்காட்சியில் பக்தி படம், பாடல்கள் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் என்றாலும் அதனையும் பார்த்தல் கூடாது.

pinterest

சிவராத்திரியன்று மனதாலும் உடலாலும் தூய்மையாய் விரதம் இருந்து  இறைவன் அருள் பெறுவோம்.

pinterest