பெண்கள் மெட்டி அணிய இதுதான் காரணமா?
திருமணத்தின் பொழுது மெட்டி அணியும் கலாச்சாரமானது நாம் பாரம்பரியமாக பின்பற்றும் பழக்கங்களில் ஒன்று.மெட்டி அணிவிக்குக்கும் பழக்கமானது ஓவ்வொரு சமூகத்திலும் மாறுபடுகின்றது.
சிலர் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மெட்டி அணிவிப்பர்.சில வீடுகளில் தாய்மாமன் மெட்டி அணிவிப்பர்.மெட்டி அணிவதற்கான காரணத்தை இப்பொழுது பார்க்கலாம்.
கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் பெண்கள் மெட்டி அணிவர், அந்த விரலில் மட்டும் மெட்டி அணிய வேண்டும், என்று பெரியோர்கள் சொல்லி வைத்ததற்கு காரணம் உண்டு.
கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. இம்மெட்டி நடக்கும் போது விரலானது அழுத்தப்படுவதால் கருப்பை வளர்ச்சிக்கு இந்த அழுத்தம் பெரிதும் உதவுகின்றது.
வெள்ளியில் மெட்டி அணிவதால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உடையது. முக்கியமாக கருப்பை நோய்களை கட்டுப்படுத்துகிறது.
கர்ப்பத்தின்போது உருவாகும் மயக்கம், வாந்தி போன்றவற்றை குறைக்கவும் கருப்பையின் நீர் சமநிலையை பேணுவதற்கும் மெட்டி பயன்படுகிறது.
மெட்டி தேய்ந்த பிறகு தூக்கி எறியக் கூடாது. அதை அப்படியே கடையில் கொடுத்து உருக்கி வரும் புது வெள்ளியால் தான் மறுபடியும் மெட்டி செய்ய வேண்டும். எந்த காரணம் கொண்டும் மெட்டியை காலிலிருந்து நீக்கலாகாது என்பர் பெரியோர்கள்.
அக்காலத்தில் மணமகனுக்கும் மெட்டி உண்டு என்று திருமங்கை ஆழ்வாரின் வரலாற்றிலிருந்து தெரிய வருகிறது. இப்பொழுதும் கூட திருமணத்தின் போது ஆண்களுக்கும் மெட்டி அணியும் பழக்கம் உண்டு.
நமது முன்னோர்களின் அறிவியலும்,ஆன்மீகமும் வியக்க வைக்கின்றதல்லவா!!!