வேம்பின் சிறப்பம்சங்கள்
BY: The News Voice
சுமார் 4000 ஆண்டுகளுக்கு மேலாக நமது முன்னோர்களால் பயன்படுத்தப்படும் அரிய மூலிகை வேம்பு எனப்படும் வேப்பிலை ஆகும்.
தோலில் ஏற்படும் நோய்த்தொற்றுகள், புண் ஆகியவற்றிற்கு வேப்பிலை சாறு மருந்தாக பயன்படுகின்றது.
கொசுக்கடியிலிருந்து விடுபட வேப்பிலை புகை மூட்டம் பயன்படுகின்றது.
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெதுவெதுப்பான நீருடன் வேப்பிலை சேர்த்து குளிக்க வைக்கும் பழக்கம் தமிழகத்தில் உண்டு.
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெதுவெதுப்பான நீருடன் வேப்பிலை சேர்த்து குளிக்க வைக்கும் பழக்கம் தமிழகத்தில் உண்டு.
சோப்பு,ஷாம்பு மற்றும் லோஷன்கள் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.
'ஆலும் வேலும் பல்லுக்குறுதி' என்ற பழமொழிக்கிணங்க வேப்பமர குச்சியால் பல் துலக்கும் போது பற்கள் பலமடையும்.
இத்தனை சிறப்புகளை தன்னகத்தே அடக்கிய வேம்பு 'சர்வ ரோக நிவாரணி' என்று அழைக்கப்படுகின்றது.