இன்றைய ராசிபலன்  3-3-2021

samayam

BY: The News Voice

மேஷம்

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொண்டு உங்கள் சொல்படி நடப்பார்கள்.கல்யாண பேச்சுவார்த்தை மேற்கொண்டால் நிச்சயம் வெற்றி அடையும். உங்கள் வாகனங்களை பழுது பார்த்து சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்க வாய்ப்புண்டு.உங்கள் திறமை வெளிப்படும் பொன்னான நாள் இது.

samayam

ரிஷபம்

உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாள் நிலுவையிலிருந்த வழக்கில் இன்று வெற்றி கிட்ட வாய்ப்பு உண்டு. உங்கள் வியாபாரத்தில் துணைபுரிய அனுபவமிக்க ஆட்களை தேடுவீர்கள்.

samayam

மிதுனம்

நீங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த வருங்காலத் திட்டத்தில் ஒன்று இன்று நிறைவேறும்.பிள்ளைகளின் திறமைகளை கண்டறிந்து அதை வெளிக்கொணர முற்படுவீர்கள்.சிக்கனத்தை கடைபிடிப்பீர்கள். வியாபார நிலுவை தொகைகள் வசூலாகும்.வேலை சம்பந்தமாக புது வாய்ப்புகள் தேடிவரும்.

samayam

கடகம்

எதிர்ப்புகள் உங்களை விட்டு அகலும்.தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் வரக்கூடும்.பணத்தேவையை சாமர்த்தியமாக சமாளித்து எதிர்கொள்வீர்கள்.வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.பிசினஸில்  புது பார்ட்னரை சேர்த்துக் கொள்வீர்கள்.

samayam

சிம்மம்

சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.அரசால் அனுகூலம் உண்டு புதிதாக வாகனங்கள் வாங்க வாய்ப்பு உண்டு.அலுவலகத்தில் உயரதிகாரிகள் உங்களது கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். வேலையாட்கள் உங்களுக்கு வியாபாரத்தில் உறுதுணையாக இருப்பார்கள்.திடீர் திருப்பம் ஏற்படும் நாள் இது.

samayam

கன்னி

குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் நாளிது.நீங்கள் கடனாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.சகோதர வழியில் ஆதரவு கிட்டும்.உத்யோகத்தில் லாபம் கிட்டும்.திடீர் திருப்பம் ஏற்படும் நாளிது.

samayam

துலாம்

ராசியில் சந்திரன் இருப்பதால் நீங்கள் எது சொன்னாலும் பொல்லாப்பில்  தான் முடியும்.வாகனங்களை வெளியில் எடுத்துச் செல்லும் முன் எரிபொருள் உள்ளதா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள்.சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து போகும்.விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள் இது.

samayam

விருச்சிகம்

குடும்பத்தாருடன் மனம் விட்டு பேசுவது நலம்.சாட்சி கையெழுத்து போடாமல் இருப்பது நலம்.வாகனங்களால் தொல்லை வந்துபோகும். வியாபாரத்தில் புது முதலீடுகளை இன்று நீங்கள் செய்யலாம். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

samayam

தனுசு

குடும்பத்தினர் உங்களது பேச்சை கேட்பார்கள்.சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.பயணங்கள் வெற்றிகரமாக அமையும்.சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் தொழிலில் வெற்றி கிட்டும்.மகிழ்ச்சியை ஏற்படுத்தும் பொன்னான நாள்.

samayam

மகரம்

சகோதரர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள்.உங்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.வியாபாரத்தில் புது ஆட்களை நியமிப்பீர்கள்.உயர் அதிகாரிகள் இடத்தில் நம்பிக்கையை பெறுவீர்கள். உங்களது சிந்தனைத்திறன் உயரும் நாள்.

samayam

கும்பம்

கணவன் மனைவி உறவு சுமுகமாக  இருக்கும். நீங்கள் நீண்டநாள் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வியாபாரத்தின் நன்மை கிட்டும். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் நம்பகமான நாளிது.

samayam

மீனம்

சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள் இது. பிள்ளைகளிடம் கோபத்தை தவிர்ப்பது நல்லது.  வியாபாரத்தில் கவனம் தேவை.பொறுமையாக செயல்பட வேண்டிய நாள் இது.

samayam