சிவராத்திரி வழிபாட்டு முறைகள்

pinterest

வருடத்திற்கு ஒருமுறை மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியை நாம் மகாசிவராத்திரி என்கிறோம்.

pinterest

சிவராத்திரி நாளில் மூன்றாம் காலத்தில் சிவனை வழிபடுவது சிறந்தது என புராணங்கள் கூறுகின்றன.

pinterest

மூன்றாம் காலத்தில் சிவனை வழிபடும் போது எத்தனை பாவங்கள் செய்திருந்தாலும் அந்த பாவங்கள் நம்மை விட்டு விலகிப் போகும் போகும் என்பது ஐதீகம்.

pinterest

முதல் நாளில் ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு ஆடம்பரங்களை தவிர்த்து மனதார சிவபெருமானை நினைத்து வழிபட வேண்டும்.

pinterest

கோவிலில் அபிஷேகம் செய்வதற்கு உங்களால் முடிந்த இளநீர்,பால் போன்ற உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி தரலாம்.

pinterest

சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து புனித நீராடி சூரியனை வழிபட்டு, வீட்டிலேயே விளக்கு ஏற்றி சுவாமியை வழிபட்டு பின் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

pinterest

சிவராத்திரி அன்று அவரவர் குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபடும் பழக்கம் தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் உண்டு.

pinterest

சிவராத்திரி அன்று நாம் பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தால் மற்ற நாட்களில் கிடைக்கும் பலன்களை காட்டிலும் 100 மடங்கு அதிக பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது.

சிவராத்திரியன்று மனதாலும் உடலாலும் தூய்மையை கடைபிடித்து கோவிலுக்குச் சென்று வர கஷ்டங்கள் நீங்கி வீட்டில் மங்களம் குடிகொள்ளும்.

pinterest