சிவராத்திரி உருவானது எப்படி?-சுவாரஸ்ய வரலாறு

மகா சிவராத்திரியானது வருடந்தோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது. இது தோன்றிய வரலாறை இப்பொழுது காண்போம்.

ஒரு காலத்தில் உலகதில் மிகப்பெரிய பிரளயம் உண்டானது.எனவே, இருந்த உயிரினங்கள் சிவனிடத்தில் ஒடுங்கின. இதனால் அண்ட பிரமாண்ட உலகம் செயலற்று இருந்தன.

கருணையே உருவான தேவி மீண்டும் அண்ட உலகம் இயங்குவதற்கும்  உயிரினங்கள் மீண்டும் செயல்பாட்டில் ஈடுபடவும், கடுமையாக இடைவிடாது தவம் செய்தார்.

அப்பொழுது சிவபெருமான் மனம் குளிர்ந்து உயிர்கள் அனைவரையும் காத்து ரட்சித்தார்.

உலகம் மீண்டும் செயல்படத் தொடங்கிய பின்பு, அம்பிகை தான் விரதம் இருந்து வழிபட்ட மகா சிவராத்திரி காலத்தில் உயிரிகளும் விரதமிருந்து வழிபட வேண்டும் என சிவனிடம் வேண்டி கொண்டாள்.

மேலும் மகா சிவராத்திரி விரத வழிபாட்டு முறையை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தி அடைய வேண்டும் எனவும் தேவி வேண்டிக்கொண்டாள்.

அதைத் தொடர்ந்து நந்தியம் பெருமானும்  சனாகதி முனிவரும்  சிவராத்திரி விரதம் இருந்து தேவியின் விருப்பத்தினை நிறைவேற்றியதாக புராண கதைகள் கூறுகின்றன.

அன்று முதல் பல காலமாக இந்த மகா சிவராத்திரி திருநாள் கடைப்பிடிக்கபட்டு வருகின்றது.

சிவராத்தியன்று காலை முதல் நள்ளிரவு வரை நான்கு காலங்களிலும் விரதமிருந்து சிவனை வழிபடுவது பாவங்களை போக்குமென்பது ஐதீகம்.