BY: The News Voice

ஸ்கார்லெட் காய்ச்சல்-ஒரு பார்வை

ஸ்கார்லெட் காய்ச்சல் பெரும்பாலும் தொண்டை வலியால் தொற்றுடன் ஆரம்பமாகின்றது.

அதிக காய்ச்சல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றுடன் உங்கள் உடலில் சிவப்பு தடிப்புகள் ஏற்படும்பொழுது இக்காய்ச்சலானது உறுதிப்படுத்தப்படுகிறது.

PINTEREST

சிவப்பு தடிப்புகளானது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் ஏற்படும் அறிகுறியாகும்.முதலில் சிவப்பு வெடிப்பு போல தோன்றி பின் உடல் முழுவதும் மணல் துகள்கள் போன்று பரவும்.

ரேஷஷானது கழுத்து, இடுப்பு மற்றும் கைகளின் கீழ் தொடங்கி உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது.

குழந்தைகளை  இக்காய்ச்சலானது அவ்வளவு எளிதில் தாக்காது.

தலைவலி, சளி, வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி, காய்ச்சல் போன்றவை வேறு சில அறிகுறிகளாகும்.

பாதிக்கப்பட்ட நபரின் உமிழ்நீர், தும்மல் அல்லது இருமல் ஆகியவற்றிலிருந்து நீர்த்துளிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் 2-5  நாட்களில் இத்தொற்றானது பரவுகின்றது.

குரூப்  A ஸ்ட்ரெப் நோய்த்தொற்றுகள் அசுத்தமான உணவு மூலம் பரவி தோலில் தடுப்புகளை ஏற்படுத்துகின்றது.ஆனால் இந்த ரேஷஸினை தொடுவதின் மூலம் மற்றவர்களுக்கு பரவாது.

பெரும்பாலும், தடிப்புகள் மற்றும் பிற அறிகுறிகள் 2 வாரங்களில் சரியாகிவிடும்,ஆனால் சிலநேரம்  கடுமையான சிக்கல்களுக்கும் வாய்ப்புள்ளது.