Newsletter சேவையினை விரைவில் அறிமுகப்படுத்த போகும் ஃபேஸ்புக்...!

April 3, 2021

Pinterest

சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக் தனி முத்திரை பதித்திருக்கின்றது.எனவே பயனாளர்களை தக்கவைக்க புதிதாகப் பல்வேறு விஷயங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றது.

எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை கவரும்விதமாக புதிய செய்திமடல் (Newsletters) தளம் ஒன்றைத் தொடங்கவிருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் தற்பொழுது அறிவித்துள்ளது.

செய்திகள்,கட்டுரைகள் ஆகியவற்றை தொகுத்து வழங்குவதற்காகவும், புதிய விஷயங்களை பொது மக்களிடம் நேரடியாக கொண்டு வந்து சேர்ப்பதற்காகவும் செய்திமடல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கொரோனா காலத்தில் பெரும்பாலான எழுத்தாளர்கள்,செய்தியாளர்கள்  இந்த செய்திமடல்கள் வெளியிடுவதை பிரபலம் ஆக்கினர்.

சமூக ஊடகங்களில் பொதுவாக பேச முடியாத விஷயங்களை கூட தனிநபர் இந்த செய்தி மடல்களின் வாயிலாக பேசக்கூடிய சுதந்திரம் கிடைத்தது.

மேலும் சந்தா தொகையானது வாசகர்களிடமிருந்து எழுத்தாளர்களை நேரடியாக சென்றடைந்தால் இது மிகவும் பிரபலமடைந்தது.

கொரோனா நெருக்கடியால் பணியிழந்த பல்வேறு பத்திரிகையாளர்களுக்கும்,எழுத்தாளர்களுக்கும் இந்த செய்தி மடல்கள் நல்ல வருமானத்தை ஈட்டித் தந்தன.

நேரடியாக பணி செய்யும் போது கிடைக்கும் ஊதியத்தை விட இதில் அதிக அளவில் ஊதியம் கிடைப்பதாகவும் எழுத்தாளர்கள் தெரிவித்தனர்.

ஃபேஸ்புக் நிறுவனம் முதலில் அமெரிக்காவில் இந்த திட்டத்தினை தொடங்க முடிவெடுத்துள்ளது.