FAR&WIDE

உலக நாடுகளின் சில  விசித்திரமான பழக்கங்கள்

BY: The News Voice

TWISTED

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில், சால்மன் சட்டம் 1986-க்கு கீழ் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சால்மன் எனப்படும் மீனை வைத்திருப்பது சட்டவிரோதமானது ஆகும்.

ஜார்ஜியா மற்றும் க்விட்மேன் ஆகிய நாடுகளில்  கோழிகளை வைத்திருந்தால் அவற்றினை சாலையைக் கடக்க அனுமதிப்பது சட்டவிரோதமானது ஆகும்.

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை அதிகம் கொண்ட குறிப்பிட்ட  மாநிலத்தில், உரிமம் பெற்ற எலக்ட்ரீஷியன் உதவி இல்லாமல் பல்பினை நாமாகவே மாற்றுவது குற்றமாகும்.

FEEDZIG

KANNADIGAWORLD

இத்தாலியில் உள்ள மிலன் எனும் இடத்தில் மக்கள் ஒருவரையொருவர் பார்க்கும்பொழுது எல்லா நேரங்களிலும் சிரிக்க வேண்டும்.இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவை இவற்றிற்கு விதிவிலக்காகும்.

புளோரிடாவில், வியாழக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு மேல் பொது இடத்தில் காற்று பிரிவது குற்றமாகும்.

WIKIPEDIA

அரிசோனாவில், இரவு 7 மணிக்குப் பிறகு நீண்ட நேரம் குளியல் தொட்டியில் கழுதை குளிப்பது சட்டத்திற்கு புறம்பானதாகும்.

THEEXPRESSTRIBUNE

ஸ்காட்லாந்து நாட்டில் யாராவது உங்கள் கதவைத் தட்டி கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்று அனுமதி கேட்டால் நீங்கள் அவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும்.

iSTOCK

PROCAFFENATION

சமோவா நாட்டில் கணவர்கள் தங்கள் மனைவியின் பிறந்த நாளை மறப்பது சட்டவிரோதமானது ஆகும்.

இத்தாலியின் டுரின் நகரில் வசிப்பவர்கள் தங்களது வளர்ப்பு நாயினை ஒரு நாளைக்கு மூன்று முறையாவது நடக்க அழைத்துச்செல்ல வேண்டும்

HEALTHLINE

VERYWELLHEALTH

பிரெஞ்சு நகரமான சர்பூரெங்க்ஸ் எனும் இடத்தில் ஒருவர் இறப்பதற்கு முன் அவரை அடக்கம் செய்யப்படுவதற்கு தேவையான நிலத்தினை  வாங்கவேண்டுமென்பது சட்டமாகும்.

நீங்கள் உலகெங்கிலும் பயணம் செல்ல ஆசைப்பட்டால் இவற்றை மனதில் வைத்து கொண்டு ஜாக்கிரதையாக செல்லலாம் அல்லவா...!!!

REDBOOK