BY: The News Voice
உங்கள் அலமாரியினை அழகுபடுத்துவது எப்படி ?
அலங்காரம் செய்து கண்ணாடியில் பார்த்த பின்பு இன்னும் கொஞ்சம் நன்றாக ஆடை அணிந்திருக்கலாமோ என்று என்னும் நபரா நீங்கள்?
கவலை வேண்டாம்! குறைவான செலவில் உங்கள் அலமாரியினை எப்படி அழகுற செய்வது என பார்ப்போம்
கொஞ்சம் கற்பனை திறனும் மெனக்கிடுதலும் இருந்தாலே போதும்.உங்கள் அலமாரியை அழகாக்கலாம்.
அலமாரியில் உங்களுக்கு மறைவில் உள்ள ஒவ்வொரு பொருளையும் ஆய்வு செய்யுங்கள். நீங்கள் அடிக்கடி அணியாதவற்றை மீண்டும் கண்டுபிடிக்கவும். பழைய ஆடைகளை புதிய கண்ணோட்டத்துடன் பாருங்கள்.
உங்கள் பழைய ஆடைகளில் சிறிய மாற்றத்தினை செய்வதின் மூலம் அவற்றினை புதிது போன்று மாற்றலாம்.உங்கள் ஜீன்ஸின் பெல்டினை மாற்றலாம்.பழைய ஜீன்ஸுடன் பொருந்துமாறு புது டாப்ஸினை அணியலாம்
நீங்கள் வழக்கமாக பார்வையிடாத இடங்களிலிருந்து ஷாப்பிங் செய்ய முயற்சிக்கவும்.இதுவரை அணியாத டிசைன்களை அணிய முற்படுங்கள்.
முற்றிலும் ஸ்டைலான உடைகளை அறிமுகம் செய்யும் ஆன்லைன் ஷாப்பிங்குகள் உள்ளன.அவற்றில் துணிகளை ஆர்டர் செய்து அணிந்து பார்க்கலாம்.
புதிய ஜாக்கெட் அல்லது கோட்டில் முதலீடு செய்யுங்கள். உங்கள் தோற்றத்திற்கு ஸ்டைலான லுக்கினை சேர்க்க இது ஒரு எளிய வழி.
சில அணிகலன்களை உங்களது பழைய ஆடைகளுடன் சேர்த்து அணிவது உங்கள் தோற்றத்தை முழுவதுமாக மாற்றும்.பழைய ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்டுடன் புதிதாக தொப்பி அல்லது ஸ்கார்ப்பினை அணிவது தோற்றத்தையே மாற்றும்.
உங்கள் பழைய ஆடைகளை புதிதாக்கி அலமாரியினை மெருகேற்ற இந்த டிப்சுகள் உதவியாக இருக்கும்.